பிரேசில் அணியின் கேப்டனும், பாரீஸ் செயின்ட் ஜெர்மைன் (பிஎஸ்ஜி) அணியின் நட்சத்திர வீரருமான நெய்மர் தொடக்கத்தில் ஸ்பெயின் கால்பந்து அணி கிளப்பான பார்சிலோனாவில் தான் விளையாடினார். பின்னர் பிரான்ஸ் நாட்டின் கிளப் அணியான பிஎஸ்ஜி 222 மில்லியன் பவுண்டு (சுமார் 1900 கோடி ரூபாய்) அளித்து நெய்மரை வாங்கியது.